fbpx
Homeபிற செய்திகள்இலக்கியம்பட்டி அரசு பெண்கள் பள்ளிக்கு ரூ.8 லட்சத்தில் கழிப்பறை கட்டுமானப் பணி- வெங்கடேசன் எம்.எல்.ஏ. துவக்கி...

இலக்கியம்பட்டி அரசு பெண்கள் பள்ளிக்கு ரூ.8 லட்சத்தில் கழிப்பறை கட்டுமானப் பணி- வெங்கடேசன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு 8 லட்சம் மதிப்புள்ள நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை கட்டும் பணியை தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இப்பள்ளி யில் ஆய்வு மேற்கொண்டார்.

இப்பள்ளியில் பயிலும் மாணவிக ளுக்கு போதுமான கழிப்பறை வசதி யின்றி அவதியுற்று வந்துள்ளனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நிதியை உடனடியாக ஒதுக்கி அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை அமைத்து தருவதாக உறுதியளித்தார்.

பள்ளியில் தற்போது கழிவறை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பின்னர், மாணவிகளிடம் பேசிய அவர், பெண்களின் கல்வி வளர்ச்சி மேலோங்க அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி மிகவும் தேவையான ஒன்று.

கழிப்பறை பெண் கல்வியின் வளர்ச்சிக்கான பாதையை வழிவக்குகிறது என்றார் எம்.எல்.ஏ. இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, இளநிலைப் பொறியாளர் பாலாமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கிருஷ்ணம்மாள், அரசு விடுதி தேர்வு குழு உறுப்பினர் இ.மா.பாலகிருஷ்ணன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img