இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம், டி.ஐ.ஐ.சி, டிட்கோ மற்றும் சி.ஐ.ஐயுடன் இனைந்து தமிழக அரசின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு பாதுகாப்பு வழித்தடத்தில் ‘பாதுகாப்பு மற்றும் விண்வெளித் தொழிலை துரிதப்படுத்துதல்’ என்ற தலைப்பில் சேலம் சோனா கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.
டிட்கோ நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்து பேசினார்.
சோனா கல்விக் குழு மத்தின் துணைத் தலைவர் தியாகுவள்ளி யப்பா, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர்.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஐ.ஐ.சி. நிறுவனத் தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஹன்ஸ் ராஜ் வர்மா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில், பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறைகளில் பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் பெரிய தனியார் தொழில்கள் மூலம் கிடைக்கும் உயரிய வணிக வாய்ப்புகளைப் பற்றி இந்த மண்டலத்தில் உள்ள உள்ளூர் தொழில்களுக்கு உணர்த்தும் விதமாக எடுத்துரைக்கப்பட்டது.
சி.ஐ.ஐ. சேலம் மண்டலத்தின் துணைத் தலைவர் அசோக்குமார் நன்றி கூறினார்.
சோனா கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



