சென்னை மகாபலிபுரம் ஷெரட்டான் கிராண்ட் ரிசார்ட்டில் வரும் 7-ம்
தேதி முதல் 14-ம் தேதி வரை, தாய் டிலைட் உணவுத் திருவிழா நடைபெறுகிறது.
தாய்லாந்து நாட்டின் பாரம்பரியமிக்க, மண் மணக்கும் உணவு வகைகளை சென்னைக்கு கொண்டு வருகிறார் தாய் செஃப் ருங்குட்டிவா ஷோர்லே.
இவர் எண்ணற்ற உணவுகளை பல்வேறு விதங்களில் தயாரித்து விருந்து படைக்க இருக்கிறார். உணவு அருந்திய பின் மனதிலிருந்து நீங்கா நினைவுகளுடன் வாடிக்கையாளர்கள் வீடு திரும்புவார்கள் என்பது நிச்சயம். ‘கிரீன் தாய் கரி’, ‘மேங்கோ ஸ்டிக்கி ரைஸ்’ போன்ற பல்சுவை உணவுகள் பெரும் விருந்தாக அமையும்.
மே 7-ம் தேதி பகல் 12.30 மணி முதல் 3 மணி வரை பிரஞ்ச் நடைபெறுகிறது.
8-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இரவு 7 மணி முதல் மாலை நேர உணவுகள் வழங்கப்படுகின்றன.
ஷெரட்டான் கிராண்ட் தலைமை செஃப் தேவகுமார் கூறும்போது, உணவு என்பது வயிற்றுக்கு மட்டும் அல்ல. அது உங்களை ஆத்மரீதியாகவும் உணர வைக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய நம்பிக்கை.
இந்த நம்பிக்கையை தாய்லாந்து உணவுத் திருவிழா நிச்சயம் தரும்.
ருங்குட்டிவா ஷோர்லே இத்திருவிழாவின் முதன்மை நபராக திகழ்வார் என்றார்.
கட்டணம் மற்றும் பதிவுக்கு 91 93848 32956 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.



