fbpx
Homeபிற செய்திகள்மொரீஷியஸ் ஜே.எஸ்.எஸ்.அகாடமிக்கு துணைப் பிரதமர் வருகை

மொரீஷியஸ் ஜே.எஸ்.எஸ்.அகாடமிக்கு துணைப் பிரதமர் வருகை

மொரீஷியஸின் துணைப் பிரதமரும், உயர்கல்வி அமைச்சருமான லீலாதேவி தூக்குன் லுச்சூமுன், மொரீஷியஸில் உள்ள ஜே.எஸ்.எஸ். அகாடமிக்கு வந்தார்.
ஜகத்குரு ஸ்ரீசிவராத்திர தேசிகேந்திர மகா சுவாமிகள் அவருக்கு ஆசிகள் வழங்கினார்.


துணைப்பிரதமர் ஜேஎஸ்எஸ் அகாட மியின் பார்மசி கல்லூரி, எம்பிஏ மற்றும் லைஃப் சயின்ஸ் தொடர்பான பல்வேறு வசதிகளை பார்வையிட்டார். மருந்தியல் கல்லூரியில் சிறந்த வசதிகள் உள்ளதால், மருந்துப் பரிசோதனை ஆய்வகங்கள் மற்றும் பாடப்படிப்புகளைத் தொடங்க ஆலோசனைகளை வழங்கினார். தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் அரசு தருவதாக உறுதி அளித்தார்.

நிர்வாகச் செயலாளர் டாக்டர் சி.ஜி.பெட்சுர்மத், டாக்டர் பி.சுரேஷ், எஸ்.பி.மஞ்சுநாத், எஸ். புட்டசுப்பப்பா, டாக்டர் பிரவீன் மொஹதேப், கே.பி.நவீன், டாக்டர் ஆஷிஷ், டி.வாத்வானி, டாக்டர் ஜெயஸ்ரீ வைஜநாதப்பா, டாக்டர் கௌதம் யரகுல உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img