fbpx
Homeபிற செய்திகள்விண்ணப்பதாரர், முதலாளிகள் தேவையை பூர்த்தி செய்ய சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் திட்டத்தில் மேம்பாடுகள் அறிவிப்பு

விண்ணப்பதாரர், முதலாளிகள் தேவையை பூர்த்தி செய்ய சிஎஃப்ஏ இன்ஸ்டிடியூட் திட்டத்தில் மேம்பாடுகள் அறிவிப்பு

சிஎஃப்எ (CFA )இன்ஸ்டிடியூட், முதலீட்டு வல்லுநர்களின் உலகளாவிய சங்கம், அதன் திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக CFA திட்டத்தில் குறிப்பிடத்தக்க மேம்பா டுகளை அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் இன்றைய விண்ணப்பதாரர்களை வெற்றிகரமான முதலீட்டு வல்லுனர்களாக தயாராகக் கற்றுத்தருகிறது, அதே நேரத்தில் தேவைப்படும் நன்கு பயிற்சி பெற்ற, நெறிமுறை வல்லுநர்களை தொழில் துறைக்கு வழங்குகிறது.

இன்ஸ்டிட்யூட் தலைவர் மற்றும் CEO மார்கரெட் ஃபிராங்க்ளின் தெரிவித்ததாவது: இந்த மேம்பாடுகள் தொழில்துறையில் உள்ள எங்கள் விண்ணப்பதாரர்கள் மற்றும் முதலாளி களுக்கு ஒரு முக்கியமான மைல்கல்லைப் பிரதி பலிக்கின்றன. உண்மையில், இவை 1963-ல் தொடங் கியதிலிருந்து நாங்கள் CFA திட்டத்தில் செய்த மிக முக்கியமான மாற்றங்களாகும்.

எதிர்கால முதலீட்டு நிபுணர்களுக்கு வழங்கும் அறிவுத்திறன் மற்றும் திறமைகளை சிறப்பாக மேம்படுத்துவது எப்படி என்பதைத் தெரிவிக்க, முதலாளிகள், விண்ணப் பதாரர்கள், வருங்கால விண்ணப்பதாரர்கள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து நேரடியாக கருத்துகளைப் பெற ஆராய்ச்சியை மேற்கொண்டோம் என் றார். “விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்புக்கான சந்தையில் இடத்தைப் பெற மிகவும் ஆர்வமாக உள்ளனர் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

மேலும் CFA திட்டம் வழங்கும் மேம்பாட்டிற்கு அவர்கள் மிகவும் கடினமாக உழைக்கத் தயாராக உள்ளனர். இந்த மாற்றங்கள் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து, அவர்கள் வேலையில் முதலீட்டுக் கருத்துகளை எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பதைப் புரிந்துகொண்டு, முதல் நாளே வேலைக்குத் தயாராக இருப்பதற்கு உதவுகின்றன.

CFA இன்ஸ்டிட்யூட் CFA திட்டத்தின் மூலம் முதலீட்டு மேலாண்மைத் துறையில் எதிர்காலத்திற்கு தயாரான திறமைக் குழுவை உருவாக்க உறுதிபூண் டுள்ளது” என்று சிதிகி இன்ஸ்டிடியூட், இந்தியாவின் தலைவர் ஆரதி போர்வால் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img