கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கொடிசியா இண்டெக் டெக்னாலஜி சென்டர் சார்பில் 8 – வது தொழிற்கண்கட்சி நடை பெறுகிறது.
இதில் 15 பொதுத்துறை நிறுவனம், 17 பெரிய தனியார் தொழிற்சாலைகள், வங்கி மற்றும் 214 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களும் பெருநிறுவனங்களும் தேவையான தகுதியுள்ள சிறு தொழிற் சாலைகளை தேர்ந்தெடுக்க உள்ளன.
அதேநேரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களும் ஆர்டர்களை பெறுவதற்கு தங்களை காட்சிப்படுத்த உள்ளன.



