சமீபத்தில் SOS சில்ரன்ஸ் வில்லேஜ் சென்னை மற்றும் ஃபேமிலி ஸ்ட்ரெங்க்த் ப்ரோக் ராம் க்ளஸ்டர் இணைந்து, ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சுகாதாரத் துறையுடன் இணைந்து முகாம் நடத்தியது.
110 குழந்தைகள், யூத் ஹவுஸ் பாய்ஸ் மற்றும் 75 ஃபேமிலி ஸ்ட்ரெங்க்த் ப்ரோக் ராம் பங்கேற்பாளர்கள் உட் பட 185 பயனாளிகளுக்கு இலவச மருத்துவ மதிப்பீடுகள் மேற் கொள்ளப்பட்டு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
பரிசோதனையில் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உரிய நேரத்தில் மருந்து மற்றும் இணை மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஃபேமிலி ஸ்ட்ரெங்க்த் ப்ரோக்ராம் ஐச் சேர்ந்த 15 பெண்கள் மற்றும் 11 குழந்தை கள் மற்றும் சில்ரன்ஸ் வில் லேஜைச் சேர்ந்த யூத் ஹவுஸ் பாய்ஸ்கள் மத்தியில் ரத்த சிகப்பணு எண்ணிக்கைக் குறைபாட்டுடன் இருந்தவர்கள் இந்த மருத்துவ முகாமில் அடை யாளம் காணப்பட்டனர்
அவர்களின் உடல் நலத்தை மேம்படச்செய்ய 3 மாதங்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன. கூடுதலாக, ஃபேமிலி ஸ்ட் ரெங்க்த் ப்ரோக்ராம் ஐச் சேர்ந்த 7 பெண்களுக்கு கால்சியம் சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது, அவர்களுக்கு ஒரு வரையறுக் கப்பட்ட உணவுத் திட்டத்தை மருத்துவர் பரிந்துரைத்தார்.
SOS சில்ரென்ஸ் வில்லேஜஸ் இந்தியா அமைப்பின் பொதுச் செயலாளர் சுமந்தா கர் கூறியதாவது: மருத்துவ முகாம் சமூகத்திற்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கி, சுகாதாரப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழத் தேவையான மருத்துவ உதவிகளை பயனாளிகள் பெறுவதை உறுதிசெய்தது என் றார்.



