fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணா கல்லூரி விழாவில் அதிகாரி விஜயகுமாருக்கு விருது

கிருஷ்ணா கல்லூரி விழாவில் அதிகாரி விஜயகுமாருக்கு விருது

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் 25வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை
புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெகஜீவன், துணை முதல்வர் விஜய சாமுண்டீஸ்வரி
ஆகியோர் வரவேற்றனர்.

விழாவிற்கு கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி கே. சுந்தரராமன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் “ கிரீஷ் 2023” க்கான சிறந்த சாதனையாளர்கள் விருது கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்ட அதிகாரி டி.வி.விஜயகுமாருக்கு குழந்தைத் தொழிலாளர்களை மீட்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பதில் முன்னோடியாக செயல்பட்டதை பாராட்டி வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்வில் சாந்தி ஆசிரமம் வினு அறம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img