கோவை அருகே உள்ள அன்னூர் நாகம்மா புதூர் சமுதாய கூடத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் பர மேஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது
விழாவில் குழந்தை தொழிலாளர் நலத்திட்ட அதிகாரி டிவி விஜயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திகேயன் உள்பட பல கலந்து கொண்டனர்.
திட்ட அதிகாரி விஜயகுமார் கலந்து கொண்டு பேசும் போது, -வளரும் குழந்தைகளுக்கு கல்வி மிக முக்கியம் எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பக் கூடாது.
விடுமுறை நாட்களில் குழந்தைகளை பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பல்திறன் பயிற்சிகளுக்கு அனுப்ப வேண்டும், என்றார்.



