தமிழ்நாடு உணவு பாது காப்பு துறை மாநில ஆணையர் அவர்கள் ஆணையின் படி , தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் , பழரச விற்பனை நிலையங்கள், ஐஸ்கிரீம் விற்பனை கூடங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான , பழ கடைகளில், ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
பாலக்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மேற்பார் வையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த கோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம். ஜி. ரோடு, ஓசூர் மெயின் ரோடு, தக்காளி மார்க்கெட், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குளிர்பான மொத்த விற்பனை நிலையங்கள், சிறு விற்பனை நிலையங்கள், பழரச விற்பனை நிலையங்கள் மற்றும் நடைபாதை குளிர்பான கடைகள் மேலும் மாம்பழம் குடோன்களை திடீர் ஆய்வு செய்தார் .
ஆய்வின் போது சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் கேன் கள், குளிர்பானங்களில் உரிய தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளனவா என ஆய்வு செய்தார்.
மேலும் குளிர்பானங்கள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாட்டல் கள் நேரடியான வெயில் படாமல் விற்பனை செய் யவும், வண்டிகளில் சப்ளை செய்வோர் உரிய பாதுகாப் பான கூடாரமிட்ட அல்லது தார்பாய்கள் போர்த்தப்பட்ட வண்டிகளில் வெயில் படாமல் சப்ளை செய்ய விழிப்புணர்வு செய்தனர்.
ஆய்வின் போது இரண்டு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் 2 லிட்டர் கொள்ளள வுள்ள 6 பாட்டில்கள் மற்றும் உரிய தேதி அச்சிடாத 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது . மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் திறந்த நிலையில் அதிக வெயில் பட்ட நிலையில் குளிர் பானங்கள் விநியோகம் செய்த விற்பனையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் உடன் உடனடி அபராதம் ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டது.
பராமரித்தல்
மேலும் பழரசங்கள், குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் குல்பி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தரமான பழங்களையும் சுத்திகரிக் கப்பட்ட குடிநீரையும், தரமான ஐஸ் கட்டிகளையும், பார்களையும் குளிர்பானங்களுக்கு பயன்படுத்த வேண்டும் மேலும் பணியாளர்கள் சுத்தமாக சுகாதாரமான முறையில் ஆடைகள், உரிய கவச உறைகள் அணிந்திருக்கவும் முறையாக பழங்களையும், மிக்ஸி போன்ற பிடிப்பான்களையும், உபயோகப்படுத்தும் பாத்திரங்கள், உபகரணங்கள் அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்தல் வேண்டும் எனவும் இனிப்பு சுவை அதிகரிக்க தேவையற்ற சுவையூட்டிகளோ, தரமற்ற வேதிப்பொருள்கள் ஏதும் கலப்பதோ கூடாது என எச்சரிக்கப்பட்டது.



