fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு - தனியார் நிறுவனம் தாராளம்

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு – தனியார் நிறுவனம் தாராளம்

கோவையில் அரசு பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பில் அமை க்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் சென்டரை சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் நாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் மையம் ஒன்றை நிறுவியுள்ளது.

இந்த அரசு பள்ளியின் 500 மாணவர்களுக்கு உதவும் வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்பூட்டர்கள், தடையில்லா மின்சார சாதனம் மற்றும் கம்ப்பூட்டர் மையத்திற்கான அடிப்படை வசதிகள் டேபிள், சேர் என அனைத்தும் வழங்கியுள்ளது.

சிறுதுளி

இந்த நிகழ்ச்சியில் பிரிகால் நிறுவனத் தலைவரும், சிறுதுளி தன்னார்வ அமைப்பின் நிர்வாக அறங்காவலருமான வனிதா மோகன் கலந்து கொண்டு கம்ப்யூட்டர் மையத்தினை திறந்து வைத்தார்.

இதில் பேசிய அவர், “மாணவர்கள் கம்ப்யூட்டர் மையத்தினை நன்றாக பயன் படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.” என்றார்.

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 100க்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் கம்ப்யூட்டர் மையம் துவக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் காலத்தில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் கலந்து பேசி பிற அவசியத் தேவையையும் பூர்த்திசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img