fbpx
Homeபிற செய்திகள்‘தன்னம்பிக்கையுடன் சொந்த பாதையை உருவாக்க வேண்டும்’- ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் அறிவுரை

‘தன்னம்பிக்கையுடன் சொந்த பாதையை உருவாக்க வேண்டும்’- ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் அறிவுரை

கோவை, துடியலூர் வட்ட மலைபாளையம் ஸ்ரீராம கிருஷ்ணா பொறியியல் கல்லூ ரியில் ஆண்டு விழா நடை பெற்றது. எஸ். என் .ஆர் சன்ஸ் அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாரா யணசாமி தலைமை தாங்கினார்.
முதல்வர் முனைவர் என். ஆர். அலமேலு வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் பெங்களூரு எல் அண்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் லிமிடெட், மெடிக்கல் டிவைசஸ் மற்றும் லைப் சயின்சஸ் துறையின் சர்வேதேச தலைவர் முரளிதர ஹோசஹள்ளி பேசியதாவது:

மாணவர்கள் தரத்தில் சமரசம் செய்யாமல், தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் கற்க வேண்டும். கருத்துகளை சரியாகப் புரிந்து கொள்வதில் நேரத்தையும் முயற்சிகளையும் முதலீடு செய் வதில் சுணக்கம் கூடாது. மாணவர்கள் பலதரப்பட்ட ஆராய்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்.

தன்னம்பிக்கையுடன் சொந்த பாதைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திறன்களைப் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். உயர்தர சிந்தனை வளர்த்திக்கொள்ளவது அவசியம் என்றார்.

கல்லூரி விழா மலர்

கல்லூரி விழா மலரை சிறப்பு விருந்தினர் வெளியிட நிர்வாக அறங்காவலர் பெற்றுக் கொண்டார். கல்லூரியின் துவக்க நாள் முதல் சிறப்பாக சேவையாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களும், காப்புரிமை பெற்று சாதனை படைத்த பேராசிரியர்களும், சிறந்த ஆராய்ச்சி புரிந்த பேராசிரியர்களும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

முன்னாள் மாணவர்கள் சார்பாக எண்டோவ்மென்ட் மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கடந்த கல்வியாண்டில் கல்வி விளையாட்டு மற்றும் அனைத்து ஊக்க திறன் மேம் பாடு துறைகளில் சிறப்பாக செயல் புரிந்தமைக்காக சிறந்த மாணவர் விருது கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறை அன்னார் ஷங்கர் என்ற மாணவருக்கும் , சிறந்த மாணவியருக்கான விருது எலக்ட் ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை ஸ்ரீஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

நாட்டியத்தில் சிறப்பான பங்களிப்பினை செய்ததற்காக நாட்டியாஞ்சலி நிருத்ய சாதனா விருது ரோபோடிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன் துறை சூரஜ் மற்றும் சங்கீத சாதனா விருது எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை சௌமியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மங்களம் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img