fbpx
Homeபிற செய்திகள்பூங்காவை சுத்தம் செய்த கவுன்சிலர் , பொதுமக்கள்

பூங்காவை சுத்தம் செய்த கவுன்சிலர் , பொதுமக்கள்

கோவை மாநகராட்சி 38 வது வார்டு வடவள்ளி குருசாமி நகரில் 10 ஆண்டுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் பயன்ப டுத்தும் வகையிலான பூங்கா அமைக்கப்பட்டது.

இந்தப் பூங்கா கடந்த பல மாதங்களாக சீரமைக்கப்படாமல் குப்பை மற்றும் புதர் மண்டி கிடப்பதாகவும் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் தெரியவந்தது. இந்த பூங்காவை அந்த வார்டு கவுன்சிலர் சர்மிளா சந்திரசேகர் மற்றும் பொதுமக்கள் சுத்தம் செய்தனர்.

காய்ந்து கிடந்த செடி கொடிகளுக்கு நீரூற்றி பராமரித்தனர். பூங்கா வளாகம் பகுதில் ரோந்து பணி மேற்கொள்ள வடவள்ளி போலீசாரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img