fbpx
Homeபிற செய்திகள்மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர்கள்- நாளை மறுதினம் ஒரு நாள் வேலைநிறுத்தம்

மின்கட்டணத்தைக் குறைக்கக் கோரி தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர்கள்- நாளை மறுதினம் ஒரு நாள் வேலைநிறுத்தம்

தமிழகம் முழுவதும் தொழில் முனைவோர்கள் நாளை மறுதினம் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக கோவை சிட்கோ தொழில் பேட்டையில் உள்ள கொசி மா சங்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

சென் னையில் இருந்து டான்சியா தலைவர் மாரியப்பன், துணை தலைவர் கோவை சுருளிவேல் மற்றும் கோவை தொழில் அமைப்புகளின் கூட்ட மைப்பான போசியா நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

டான்சியா தலைவர் மாரியப்பன் பேட்டியில் கூறியதாவது:
8 ஆண்டுகாலம் மின்சார கட்ட ணத்தை உயர்த்தாமல் தற்போது உயர்த்தியுள்ளது, தண்டனையாக கொடுத்துள்ளனர். தமிழக அரசு, மின்சார வாரியம் எங்களது கோரிக் கைக்கு செவிசாய்க்கவில்லை. தாழ்வு அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் 35 ரூபாயை 150 ரூபாயாகவும், 350 ரூபாயை 550 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

தொழில் நடத்தினாலும், நடத்தா விட்டாலும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மின்சார நிலைக்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். பீக் ஹவரை 3 மணி நேரம் என்பதை 8 மணி நேரமாக உயர்த்தியுள்ளனர்.

காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் 10 மணி வரை என 8 மணி நேரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மீட்டர் பொருத்த வேண்டிய பொறுப்பு மின்சார வாரியத்திற்கு தான் உண்டு. தொழில் அமைப்புகளை மின்சார வாரியம் ஏமாற்றி வருகிறது.

கிலோவாட்டை குறைத்து தர சொன்னால் ரூ.5 லட்சம் பணம் செலுத்த சொல்கின்றனர். மின்சாரம் வேண்டாம் என்றாலும் பணம் கேட்கின்றனர். இரட்டிப்பு தண்டனையை எம்.எஸ். எம்.இ., துறைக்கு மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

நெசவாளர்களுக்கு மின் சலுகைகள் வழங்கியதை வரவேற்கிறோம். மாற்றாந்தாய் கண் ணோட்டத்தோடு எம்.எஸ்.எம்.இ., யை பார்ப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் எம்.எஸ். எம்.இ.க்கு மின்சார வாரியத்தால் பாதிப்பில்லை எனக்கூறியது தவறு.

நாங்கள் 6 மாதத்திற்கு மேல் காத்திருந்தோம். எம்.எஸ்.எம்.இ, இலவசம் கேட்கவில்லை, எங்களால் முடிந் தளவு செலுத்தும் வகையில் மின் கட்டணத்தை குறைக்கவே கேட்கிறோம்.

தமிழகத்தில் உள்ள 130 சிட்கோ பேட்டைகளில் 24 தொழிற்பேட்டைகளுக்கு 99 வருட குத்தகை முறையை ரத்து செய்ய வேண்டும், நில மனைகளை விற்பனை பத்திரமாக வழங்கக்கோரி கோரிக்கை.ஜெயலலிதா காலத்தில் போராடி 30 ஆண்டுகால குத்தகையை பெற்றோம்.

பரிந்துரைகள்

எம்.எஸ்.எம்.இ., க்கான நல வாரியம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகாலம் கேட்டு வருகிறோம் General.insurance corporation limited மூலம் அரசு பாலிசி எடுத்து கட்டணம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட அரசால் நியமிக்கப்பட்டுள்ள குழு 50 பரிந்துரைகள் செய்துள்ளது.

இதனை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதிவழி போராட்டமும், ஒரு நாள் வேலை நிறுத்தமும் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img