உலகளவில் சுமார் 1,00,000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட் டிரீம்தா DreamDaa’ தனது கனவை நனவாக் கும் முயற்சியின் ஒரு மைல்கல்லாக சேலத்தில் உள்ள ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது.
முதற்கட்டமாக 1,000 மாணவர்கள் ஒரு வருட காலத்தில் (இரண்டு செமஸ்டர்கள்) ஆங்கில மொழிப்பயிற்சி பெற இருக்கிறார்கள். தொடக்கவிழாவில், ‘டீரிம்தா’ தலைமை நிர்வாக அதிகாரியும், தொழில்முனைவோர்களுக்கு ஊக்கமளிப்பதில் முன்னோடியாகத் திகழும் Kissflow நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பேசும்போது, மாணவர் கள் ஆங்கிலம் பேசுவதற்கு அதிக நம்பிக்கையைக் கொடுப்பதை நோக் கமாகக் கொண்டுள்ளோம். இதனால் அவர்கள் உலகளவில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள் என்றார்.
சென்னையைத் தளமாகக் கொண்டு இயங்கும் தொடக்க நிறுவ னமான DreamDaa, தமிழ்நாட்டு மாணவர்கள் ஆங்கிலத்தை சரளமாகப் பேசுவதற்காக, செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் பயிற்சிகளைத் தமிழ் மொழியிலும் கொடுத்து ஆங்கிலத்தைப் பேசவும், எழுதவும் தெளிவாகக் கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது.
‘ஐடியா பட்டறை
தமிழ்நாடு அறக்கட்டளையின் ‘ஐடியா பட்டறை மற்றும் முயற்சியின்’ கீழ் இது சேவை மனப்பான்மையுடன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகிறது.
DreamDaa கல்லூரிகளுடன் இணைவதன் முக்கிய நோக்கம், “மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் வேலைக்கான நேர்காணல்களில் கலந்துகொண்டு வெற்றிபெற வேண் டும்” என்பதே.
iSource நிறுவனர், CEO மற்றும் DreamDaaவின் இயக்குநர்களில் ஒருவரான சிவகுமார் சடையப்பன் கூறுகையில், பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்ட ஆய்வகங்களில் DreamDaa பயன்பாட்டைப் பயன் படுத்தி ஆங்கிலத்தைப் பயிற்சி செய்வது, மாணவர்கள் ஆங்கிலம் கற்கத் தயங்குவதற்கான தடைகளை நீக்குகிறது என்றார்.



