fbpx
Homeபிற செய்திகள்இந்தியாவில் லூப்ரிகண்ட் உற்பத்தி ஆலையை உருவாக்க எக்ஸான்மொபில் திட்டம்

இந்தியாவில் லூப்ரிகண்ட் உற்பத்தி ஆலையை உருவாக்க எக்ஸான்மொபில் திட்டம்

மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ராய்காட்டில் உள்ள இசம்பே இன்டஸ்ட் ரியல் ஏரியாவில் ஒரு லூப்பிரிகண்ட் உற்பத்தி ஆலையை உருவாக்க கிட்டத்தட்ட ரூ 900 கோடி (110 மில்லியன் யு.எஸ் டாலர்கள்) முதலீடு செய்வதாக எக்ஸான்மொபில் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் மற்றும் மகாராஷ்டிர மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நிறுவனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், உற்பத்தித்துறை, எஃகு, மின்சாரம், சுரங்கம் மற்றும் கட்டுமானம் மற்றும் அதேபோல பயணிகள் மற்றும் வர்த்தக வாகனப் பிரிவுகள் போன்ற தொழில்துறை துறைகளில் வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆண் டுதோறும் 159,000 கிலோ லிட்டர் உயர்தர லூப்ரிகண்ட்களை உற்பத்தி செய்யும் சாத்தியத்துடன் இந்த ஆலை திறன் கொண்டிருக்கும். இது 2025-ம் ஆண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லூப்ரிகண்ட்

இந்தியாவில் உள்ள எக்ஸான்மொபில் இணை நிறுவனங்களுக்கான நாட்டின் தலைமை மேலாளர் மான்டி டாப்சன் கூறும்போது “மஹாராஷ்டிர மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாகும். அதன் கவர்ச்சி கரமான முதலீட்டு சூழல் காரணமாக, லூப்ரிகண்ட் ஆலைக்கு இது இயற்கையான தேர்வாக உள்ளது,” என்றார்.

எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி விபின் ராணா பேசும்போது, இது இந்தியாவின் உயர் செயல்திறன் கொண்ட லூப்ரிகண்ட்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக எங்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு படி மாற்றமாகும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img