கோவையில் அனைத்து திருச்சபைகளின் ஐக்கியம் சார்பில் ஈஸ்டர் திருவிழா கோவை டவுன்ஹால் டிஇஎல்சி ஆலய வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு டிஇஎல்சி ஆலயத்தின் தலைமை ஆயர் அருட்திரு. ஜே.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். விழாவில் கோவை மாந கராட்சியின் துணை மேயர் ரா. வெற்றிச் செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
ஏசிஐ திருச்சபையின் அருட்திரு. ஜெயக்குமார், ஹார்வெஸ்ட் இந்தியா மிசன் நிறுவனர் தலைவர் அருட்திரு. ரூபன், கோவை மறை மாவட்ட கத்தோலிக்க சங்கத்தின் தலைவர் லயன் ஏ.அருள் தாஸ், ராமநாதபுரம் சீரோ மலபார் கத்தோலிக்க மறை மாவட்டம் சார்பில் பி.அருள் டிசில்வா, அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம்.ஸ்டீபன் ராஜ், டிஇஎல்சி கிறிஸ்து நாதர் ஆலயத்தின் பொருளாளர் எஸ்.சுனில்குமார் பாக்கியநாதன், ஜீசஸ் கால் சாம், டிஇஎல்சி ஆலய கமிட்டியின் உறுப் பினர்கள் ஜான் பிலிப்ஸ், ஜி. சவுந்தர்ராஜ், ரூபன், வனிதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
கோவை அனைத்து திருச் சபைகளின் ஐக்கியத்தின் நிறுவனர் தலைவர் ஆயர் டி.வி. கருணாகரன் ஈஸ்டர் விழா சிறப்பு செய்தி அளித்தார் ஐ.ஜே.கே. ஜெயக்குமார், இசை இளவல் எபினேசர் இம் மானுவேல், ஆகியோர் குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடந்தது.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சரித்திரத்தை சித்தரிக்கின்ற பிரமாண்டமான கல்வாரி அன்பு, என்கிற ஒலி ஒளி மேடை நாடகம் நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்து சபைகளையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.



