Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார், அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார், அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய ஆவின் பாலகத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாநகராட் சிக்குட்பட்ட 34 வது வார்டு சின்னமணிநகர் பூங்கா அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், ஆவின் பொது மேலாளர் ராஜா குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் ஏபிசிவி சண்முகம் ,மாநகர தலைவர் முரளி தரன், மாநகராட்சி மண் டல தலைவர் அன் னலட்சுமி, மாமன்ற உறுப் பினர்கள் சந்திர போஸ், பொன்னப்பன், எடிண்டா, மாநகர் நல அலுவலர் ஸ்டாலின் பாக்கியராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, காங்கிரஸ் கட்சியின் சேகர், அமைச் சரின் நேர்முக உதவியாளர் கல்யாண்சுந்தரம் உதவி யாளர்கள் அல்பர்ட் செந்தில்குமார், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உதவியாளர் பிரபாகர், உட்பட கட்சியின் நிர்வாகிகள் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img