fbpx
Homeபிற செய்திகள்குடிநீர் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

குடிநீர் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

கோவை மாநகராட்சியின் விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்கு தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் ரூ.740 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில், நீரேற்று நிலையம், குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திட்டம் நிறை வேற்றப்பட்டால் மாநகராட்சிக்கு கூடுதலாக 178 எம்.எல்.டி. குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில மாதங்களில் கொண்டு வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பணிகள்

இந்த திட்டத்தின் கீழ் ரூ.134 கோடி செலவில் தலா 73 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மாஸ்டர் ஸ்டோரேஜ் குடிநீர் தொட்டி பன்னிமடை அருகே கட்டப்பட்டு வருகிறது.

இந்த குடிநீர் தொட்டி கட்டும் பணியை கூடுதல் தலைமை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

அப்போது அவருடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் இ.ஆ.ப., குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் மாநகராட்சி பொறியாளர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img