கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்பணிகள் குறித்த ஆய்வினை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா மேற்கொண்டார்.
கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சூலூர் வாரச்சந்தை வளாகபணி, மூலதனமானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு, தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தார் சாலை, பேரூராட்சியின் வளம் மீட்பு பூங்கா மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் ஆய்வை மேற்கொண்டார் .
ஆய்வில் பணிகளை குறித்த காலத்தில் சிறந்த தரத்துடன் முடிப்பதை உறுதி செய்தார். மேலும் கட்டுமானத்தில் புதிய செயல்பாடுகள் பற்றி ஆய்வை நடத்தினார்.
பேரூராட்சியில் நடைபெற்று வரும் தூய்மை பணியையும் பேரூராட்சி பகுதியில் இருந்து பெறப்படும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு அவைகள் உரமாக்கப்பட்டு உரங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கும் பணியினையும் பார்வையிட்டு பாராட்டினார்.
வார சந்தை
சூலூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் இயக்குனரிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மேம்படுத்தப்பட்ட வார சந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார்.
சூலூர் பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன் பேரூராட்சியின் பழைய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டிடம் பல்வேறு பகுதிகளுக்கு தேவைப்படும் சாலை வசதிகள் மற்றும் கழிவுநீர் மழை நீர் வடிகால் தேவை குறித்த மனுவினை இயக்குனரிடம் வழங்கினார்.
ஆய்வின்பொழுது கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத்சிங், பேரூராட்சிகளின் பொறியாளர் ஜெகதீஸ்வரி, உதவிசெயல் பொறியாளர் லலிதாமணி, பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், இளநிலை பொறியாளர் புருஷோத்தமன், பேரூராட்சி தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன், பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், கண்ணம்பாளையம் பேரூராட்சிதலைவர் புஷ்பலதா ராஜகோபால் , சூலூர் பேரூராட்சிதுணைத் தலைவர் கணேஷ் , பசுமை நிழல் அமைப்பு பொறியாளர் விஜயகுமார், நீர்நிலை அறக்கட்டளை இனிதாகுமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.



