fbpx
Homeபிற செய்திகள்‘எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை’: வரலாற்று புகைப்பட கண்காட்சியை கிராமப்புறங்களில் நடத்த வேண்டும்- நாட்டுப்புற...

‘எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை’: வரலாற்று புகைப்பட கண்காட்சியை கிராமப்புறங்களில் நடத்த வேண்டும்- நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பேட்டி

கோவை வ உ சி மைதானத்தில், “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சி கடந்த 7 ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கண்காட்சியை தினமும் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று, நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி ஆகியோர் இந்த வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். புகைப்படங்களை பார்த்து வியந்தவர்கள் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கோவை வஉசி பூங்காவில் முதல்வர் 50 ஆண்டுகால புகைப் பட கண்காட்சி பார்த்தோம், அவரது உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை, அனைத்தும் பார்க் கும்போது வியக்காமல் இருக்க முடி யாது. ஆரம்ப காலத்தில் இருந்து தொண்டராக, இளைஞரணி செயலாளராக, கொஞ்சம் கொஞ்சமாக தன்னைத் தானே பொது வாழ்க்கையில் அர்ப்பணித்து பல கஷ்டங்களை அனுபவித்து இன் றைக்கு அவர் நம்முடைய முதல் வராக வந்துள்ளார்.

உண்மையில் அவர்பட்ட கஷ்டங்கள் உழைப் புக்கு கிடைத்த மக்கள் கொடுத்த அன்பு வெற்றியைத் தான் பார்க்க வேண்டும் என செந்தில் கூறினார்.

தொடர்ந்து ராஜலட்சுமி கூறும்போது, இதனை பார்க்கும் பொழுது ஒரு மணி நேரம் பார்த்தால் பத்தாது. இதனை பார்க்கும்போது முதல்வர் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த அந்த புகைப்படங்கள் பேசுகிறது. ஒரு வருடம் சிறையில் இருந்த காட் சியை பார்க்கும்போது ஒரு மாதிரி நெகிழ்வாக இருந்தது.

ஒரு தலைவன் எப்படி எல்லாம் உருவாகி இருக்கிறார் என்பது மிகப்பெரிய எடுத்துக்காட்டு. முதல்வர் திட்டத்தை உருவாக்கி மக்களி டத்தில் கொண்டு சேர்ப் பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது. முதல்வர் அவர்கள் நல்ல தந்தையாக, மகனாக, தொண்டனாக, தலைவனாக இருந்திருக்கிறார்.

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை”

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என தெரிவித்தார். எங்களுக்கு பிடித்த புகைப்படம் பெரியாருடன் முதல்வர் நின்ற புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. இட்லி செந்தில் கணேசுக்கு பிடிக்கும். அதே போல முதல்வர் அவர்களுக்கு, அவரது துணைவியார் இட்லி பரிமாறும் புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்தது.

இசைக்கருவி வாசிப்பது போல புகைப்படம் அதுவும், எங்களுக்கு மிகவும் பிடித்தது. மிசாவில் கைதாகி சிறையில் இருந்துள்ளார். அவர் பட்ட கஷ்டங்கள் பயங்கரமாக உயர்ந்தது. சித்தரவதை அனுபவித்துள்ளார் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணித்து இன்றைக்கு தமிழ் நாட்டுடைய முதல்வராக அழகாக ஆட்சி செய்து வருகின்றார்.

ஐயா உடைய பணி சிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம். அன்பு மட்டுமே நாங்கள் கொடுக்க முடியும், முதல் வருடைய சேவை இன்னும் தொடர வேண்டும். நீண்ட நாள் ஆரோக்கியமுடன் இருக்க கட வுளை வேண்டுகிறோம்.

பெருநகரங்களில் இது போன்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போல, கிராம பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், திமுக மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மேயர் கல்பனா ஆனந்த குமார், மண் டல தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img