fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

கரூர் அருகே தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம் புகலூரில் உள்ள காந்தியார் மண்டபத்தில் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் புகலூர் தாலுகாவில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கரூர் கோட்டாட்சியர் ரூபி னா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் புகலூர் வட்டாட்சியர் முருகன், புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர், மாற்று திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் காமாட்சி, மருத்துவத்துறை அதிகாரிகள், இருபால் மாற்றுத் திறனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மனுக்கள்

முகாமில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகள் குறித்து மனுக்களாக கரூர் கோட்டாட்சியர் ரூபினாவிடம் வழங்கினர். நேற்று நடைபெற்ற முகாமில் 75 பேர் மனு அளித்தனர் மனுக்களை ஆய்வு செய்த ரூபினா மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீல் சேர் -3 பேருக்கும், காதொலி கருவி 3- பெருக்கும் ஊன்றுகோல் , கண் கண்ணாடி 1- நபருக்கும் உடனடியாக வழங்கப்பட்டது.

மற்ற மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார் கோட்டாட்சியர் ரூபினா. உபகரணங்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img