fbpx
Homeபிற செய்திகள்‘புதுமைகள், மாற்றங்களை எதிர்கொள்ள தயங்க வேண்டாம்’: ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி தின விழாவில் அறிவுறுத்தல்

‘புதுமைகள், மாற்றங்களை எதிர்கொள்ள தயங்க வேண்டாம்’: ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி தின விழாவில் அறிவுறுத்தல்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 32-வது கல்லூரி தினவிழா நடைபெற்றது. கல்லூரி உயிர் வேதியியல் துறைத் தலைவர் முனைவர் ப.சித்ரா வர வேற்றார். முதல்வர் முனைவர் கி.சித்ரா ஆண் டறிக்கை வாசித்தார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி தலைமை தாங்கிப் பேசும்போது, பெண்கள் தங்கள் முன்பிருக்கும் தடைகளைத் தகர்த்து முன்னேறப் பக்கபலமாக இருப்பது கல்வி மட்டுமே. கல்வியின் துணை கொண்டு தங்கள் வாழ்க்கையையும் சமூகத்தையும் மேம்படுத்தப் பெண்களால் முடியும் என்றார்.

சிறப்பு விருந்தினர் பெங்களூரு லேபர்நெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் காயத்ரி வாசுதேவன் பேசும்போது, புதுமைகளையும் மாற்றங்க ளையும் எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். கல்வியை நடைமுறைப்படுத்தும் முயற்சி களைத் தன்னம்பிக்கையோடு பெண்கள் முன்னெடுக்கும்போது ஒரு சமூகம் நிச்சயமாக முன்னேறும் என்றார்.

கல்வி, ஆய்வு, விளையாட்டு போன்றவற்றில் சிறந்த மாணவியருக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. ஆய்வுகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்களும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவியர் பங்களிப்பில் சாதனை படைத்த துறைகளும் பாராட்டப்பட்டனர்.

இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவிகளுள் சிறந்த மாணவிகளுக்குக் கல்லூரி முதல்வர் பெஸ்ட் அவுட்கோயிங் விருது வழங்கினார். கல்லூரி மாணவத்தலைவர் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img