fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் ஆகாஷ் பைஜூஸ் மையம் திறப்பு

திருப்பூரில் ஆகாஷ் பைஜூஸ் மையம் திறப்பு

ஆகாஷ் பைஜூஸ், திருப்பூரில் முதல் வகுப்பறை மையத்தைத் திறந்துள்ளது.
புதிய மையத்துடன் சேர்த்து, தற்போது 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 325+ மையங்களைக் கொண்டுள்ளது.

ஆகாஷ் பைஜூஸ், வார்டு ஜி, 1வது -2வது தளம், பிளாக் 11, தாராபுரம் மெயின் ரோடு, கரட்டாங்காடு, திருப்பூர் எனும் முகவரியில், 9 வகுப்பறைளுடன் இயங்குகிறது.

புதிய மையத்தை ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குநர் தீரஜ் குமார் மிஸ்ரா திறந்து வைத்தார்.

பதிவு

மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலைப் பகிர்வதன் மூலம் உடனடி சேர்க்கை மற்றும் உதவித்தொகை தேர்வு (iACST),ACST ஆகியவற்றில் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கும் ஆகாஷ் பைஜூஸின் நேஷனல் டேலண்ட் ஹண்ட் தேர்வுக்கு (Anthe) பதிவு செய்யலாம்.

இது நிறுவனத்தின் முதன்மையான வருடாந்திர உதவித் தொகையைப் பெறுவதற்கான தேர்வாகும். சமீபத்தில் முடிவடைந்த ANTHE 2022-ல், திருப்பூரில் இருந்து 3800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

ஆகாஷ் பைஜூஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி கூறியதாவது: எங்கள் முக்கிய வேறுபாடு பாடநெறி உள்ளடக்கத்தின் தரம் மட்டுமல்ல, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் முறைகளுக்கு இடையே சரியான சமநிலையைக் குறிக்கும் தரமும் ஆகும் என்றார்.

ஆகாஷ் பைஜூஸ் அதன் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்பறைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 3.30 லட்சம் மாணவர்களுக்கு நீட், ஐஐடி-ஜேஇஇ, ஒலிம்பியாட்ஸ் மற்றும் அடித்தளத் திட்டங்களுக்கான பயிற்சி சேவைகளை வழங்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img