தர்மபுரி நகரில் பகுதியில் கடைகளின் பெயர் பலகையை தமிழில் மாற்றுவதை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார் தமிழ்நாட்டில் தமிழைக் காக்க வேண்டும் என்பதற்காக தமிழைத் தேடி என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயணத்தையும், அதன் தொடர்ச்சியாக தமிழைக் காப்பதற்காக அரசுக்கும், வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டிலுள்ள நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழை முதன்மைப்படுத்தி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்.
பெயர் பலகை
தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி, தமிழை முதன்மைப்படுத்தி பெயர்ப் பலகைகளை அமைக்க வேண்டும் என்று தருமபுரி வணிக நிறுவனங்களிடம் வலியுறுத்திய நிலையில், தருமபுரி நகர பேருந்து நிலையத்திலுள்ள மலர் அங்காடிகளின் பெயர் பலகையை தமிழில் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, தருமபுரி நகரத்தில் முதல் பெயர் பலகை தமிழில் முதன்மைப்படுத்தி வைக்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது.
அடுத்தகட்டமாக மாவட்டத்திலுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வணிக நிறுவனங்களின் பெயர் பலகையை தமிழில் வைக்க தொடர்ச்சியாக வலியுறுத்தப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.பாரிமோகன், பாமக மாநில துணைத்தலைவர் பி.சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வணங்காமுடி, மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன், பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் க.மாது, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சின்னசாமி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சி.சிவக்குமார், மாவட்ட தொழிற் சங்க செயலாளர் மின்சாரம் சின்னசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.ஜி.மணி, மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் வாசுநாயுடு, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் ர.கார்த்திகேயன், நகர செயலாளர்கள் வே.சத்தியமூர்த்தி, கி.வெங்கடேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எழில் பச்சியப்பன், வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் பொறுப்பாளர் ஆனந்த், பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ராஜவேல், கணேசன், மகாலிங்கம், கோவிந்தன், சந்திரன், முத்துகுமார், குமரவேல், கலீம், சானவாஸ், ஷாஜகான், ஜெய்கணேஷ், ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



