கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.5க்குட்பட்ட தண்ணீர்பந்தல் பி.பி.ஜி.கல்லூரி சாலை, சம்பத் நகர் பகுதிகளில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என வகைப்படுத்தி தரம்பிரித்து கொடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென தூய்மைப்பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



