fbpx
Homeபிற செய்திகள்அதிக பாதுகாப்புடன் ‘ஸ்லேவியா செடான்’ கார்

அதிக பாதுகாப்புடன் ‘ஸ்லேவியா செடான்’ கார்

ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் க்ராஷ் தர மதிப்பீடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது. ‘ஸ்கோடா ஸ்லேவியா செடான்’ குளோபல் புது கார் பகுப்பாய்வு திட்டத்தின் கீழ் (குளோபல் என்சிஏபி) சமீபத்தில் நடைபெற்ற க்ராஷ் பரிசோதனைகளில் 5க்கு 5 நட்சத்திர மதிப் பெண்களை முழுமையாகப் பெற்றது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குநர் பீட்டர் ஸோல்க் கூறியதாவது:
ஸ்கோடாவின் உபாயங்களின் ஓர் அங்கமாக எங்கள் நுகர்வோரின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்து கொள்வதில்லை.

எங்களது இரண்டாவது இந்தியா 2.0 கார் – ஸ்லேவியாவுக்கு குளோபல் என் சிஏபி பாதுகாப்புப் பரிசோதனையில் 5 நட்சத்திர மதிப்பெண் கிடைத்துள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பாதுகாப்பு, குடும்பம், மனித நேயம் உள்ளிட்ட எங்கள் பிராண்ட் விழுமியங்களுக்கு இது துல்லியமாகப் பொருந்தும். பாதுகாப்பான கார்களை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

கட்டமைப்பு

ஸ்கோடாவின் அசத்தல் ஓட்டும் பண்புகள், பாதுகாப்பில் சமரசம் இல்லை ஆகியவற்றை இலக்காக் கொண்டும், உள்ளூர் தயாரிப்பு, செலவு மற்றும் பராமரிப்பு குறைவு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டும் ஸ்லேவியா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் கூடு கட்டமைப்பு லேசர் வெல்டிங்கினால் ஆனது.

6 ஏர்பேக், மின்னணு நிலைத்தன்மைக் கட்டுப்பாடு, மல்டி கொலிஷன் பிரேக்கிங்க், டிராக்ஷன் கண்ட்ரோல், ஆண்டி-லாக் பிரேக், குழந்தைகள் இருக்கைகளுக்கான ஐஸோ ஃபிக்ஸ் மவுண்ட்ஸ், டாப் டீத்தர் ஆங்கர் பாயிண்ட்ஸ், ரெயின் சென்சிங்க் வைப்பர்ஸ், ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ், டயர் அழுத்த கண்காணிப்புக் கருவி உள்ளிட்ட பல அம்சங்கள் ஸ்லேவியாவில் பொருத்தப்பட்டுள்ளன.

படிக்க வேண்டும்

spot_img