25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப் பிரசவத்தில் சாதனை படைத்ததற்காக சேலம் டாக்டருக்கு விருது வழங்கப்பட்டது. சேலத்தில் நடந்த இந்த விழாவில், 20 ஆண்டுகளில் சுமார் 25,000 மேற்பட்ட சுகப் பிரசவத்தில் சாதனை படைத்து வரும் ஆரோக்கியா மகளிர் மருத்துவமனை நிறுவனத் தலைவர் டாக்டர் ராணி வரதராஜு கௌரவிக்கப் பட்டார்.
அவரது மருத்துவ சேவையை பாராட்டி அபௌட் ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் மருத்துவ காரிகை விருது 2023 வழங்கப்பட்டது.
ஆர்வி எஜுகேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட் சார்பில் சாதனை படைத்த பெண்களுக்கு தமிழணங்கு விருது 2023 வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.பார்த்திபன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



