கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) முன்னிலையில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப சச்சிதானந்தம் மேற்பார் வையில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பீளமேடு அண்ணா நகர் கழக அலுவலகம் அருகில் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் கழகத்தின் 75வது பவள விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு உடன்பிறப்புகளாய் இணைவோம் தமிழர்களாய் தலைநிமிர்வோம் புதிய உறுப்பினர் சேர்க்கை மூகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியம், பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், பகுதி செயலாளர் துரை செந்தமிழ் செல்வன், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, வட்டக் கழக செயலாளர் நாராயணன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாபு, பகுதி துணை செயலாளர்கள் கீரின்வேஸ் சுப்பிரமணி,லட்சுமி, பகுதி பிரதிநிதிகள் செல்வராஜ், பூ.வே.துரைசாமி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கனிமொழி, வார்டு அவைத்தலைவர் சுந்தர்ராஜ், சுரேஷ்குமார் சிஜிசி நடராஜ், ஆட்டோ வாசுதேவன், மேத்தா லே அவுட் மணி, ரங்கதுரை, சத்தியராஜ், வசந்தகுமார், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.



