fbpx
Homeபிற செய்திகள்ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அனைத்து மத பிரதிநிதிகள் பங்கேற்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அனைத்து மத பிரதிநிதிகள் பங்கேற்பு

கோவை மாவட்டத்தின் சார்பாக பல்சமய தலைவர்களுக்கான இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி கடந்த 28.ம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் கரும்புக்கடை இஹ்ஸான் பள்ளிவாசலில் நடைபெற்றது.

நிகழ்வில் துவக்கமாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாவட்ட தலைவர் ஜனாப்.றி.ஷி.உமர் ஃபாரூக் அவர்கள் துவக்க உரை ஆற்றினார். துவக்கவுரையில் நோன்பின் சிறப்புகளை பற்றியும், ஜமாஅத் மேற்கொண்டு வரும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த 75 வருட காலங்களில் ஆற்றி வந்த சமூகப் பணிகள் பற்றிய பறவை பார்வையை தெற்கு மண்டல தலைவர் முனைவர்.சையது அபுதாஹிர் எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் சமூக நல்லிணக்கம் குறித்தும், மனித நேயம் குறித்தும் ஆன்மீக தலைவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின்னர் மாலை நேர தொழுகையை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் ஆன்மீக தலைவர்கள் அனைவரும் அமர்ந்து மாலைநேர தொழுகைகளை பார்வையிட்டனர்.

இறுதியாக வந்திருந்த அனைத்து தலைவர்களும் இரவு உணவு விருந்தில் கலந்து கொண் டனர். இந்நிகழ்வில் கோவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபையின் செயலாளர் அருட்தந்தை. ஜான் ஜோசப், புனித மைக்கேல் கோவை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை தனசேகரன், நாகசக்தி அம்மன் சமூக ஆன்மீக அறக்கட்டளை நிலவேம்பு சித்தர் ஜகத்குரு பாபுஜி சுவாமிகள், எருசலேம் ஜெப ஆலயம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை. சகாயராஜ், பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி. முஹம்மது ரஃபி, திருக்குறள் ரத்னா கோவை மு.க.அன்வர் பாஷா, கரும்புக்கடை இஹ்ஸான் பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி. இஸ்மாயில் இம்தாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வினை கோவை கிழக்கு மண்டல தலைவர் ஜனாப்.அப்துல் ஜலீல் சாஹிப் வழிநடத்தினார். எல்லோரும் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. முஸ்லிம்களின் தொழுகை முறையை அவர்கள் அனைவரும் நேரடியாக பார்வை யிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜமாத் இஸ்லாமி ஹிந்த் கோவை பெருநகர கிளை சார்பாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ரமலான் நோன்பு, அதன் பின்னணி, ரமலான் மூலமாக மக்கள் மனங்களில் உண்டாகும் இறையச்ச மனப்பாங்கு, இஸ் லாம் கூறும் சமூக நீதி , இன்னும் பல்வேறு விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சி

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல் சமய ஆன்மீக தலைவர்கள் கலந்து கொண்ட பீஸ் பார் ஹார்மோனி நிகழ்ச்சி கிறிஸ்துவ தேவாலயத்தில் நடைபெற்றது. பல் சமய அறிஞர்களும் கலந்து கொண்டு அதில் உரையாற்றினார்கள்.

இது போன்ற நிகழ்ச்சிகளை மத நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதியை செழித்தோங்க செய்தல் ஆகிய நல்ல நோக்கங்களின் அடிப்படையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நாடு முழுவதும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img