fbpx
Homeபிற செய்திகள்ஐடிசி நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

ஐடிசி நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

காரமடையை அடுத்துள்ள தாயனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேக்கம்பட்டி ஐடிசி நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச பொது மருத்துவ முகாம் தலைமை நிர்வாகி வெங்கட்ராவ் தலைமையில் நடைபெற்றது.

இம்மு முகாமில் கோவை கேஜி மருத்துவமனை மற்றும் மேட்டுப்பாளையம் ஐ பவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு பிரபல மருத்துவமனை மருத்துவர் கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், சிகிச்சையும் அளித்தனர்.

இம்முகாமில் பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், எலும்பு முறிவு, ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப் பட்டது.

இம்முகாமில் ஐடிசி நிறுவன மனித வளத்துறை தலைவர் மஹிதர் பாபு, பொறியியல் துறை தலைவர் அழகிரி, உற்பத்தி துறை தலைவர் முரளி, வேளாண்மை மேலாளர் வீரமணி, பிரபல மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர் மற்றும் தாயனூர், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

படிக்க வேண்டும்

spot_img