fbpx
Homeபிற செய்திகள்‘ஓய்வு நிதி மீது அதிகரித்து வரும் ஆர்வம்’ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் தகவல்

‘ஓய்வு நிதி மீது அதிகரித்து வரும் ஆர்வம்’ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைப் இன்சூரன்ஸ் தகவல்

“ஓய்வு என்பது ஓர் இடைநிறுத்தம், நிறுத்தம் அல்ல” என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றை குறித்த அவர்களின் தற்போதைய மனப்பான்மையாக இருக்கிறது.

ஓய்வு திட்டமிடல் குறித்த மக்களின் மனப்பான் மையை புரிந்துகொள்வதற்கு, “இந்தியா ஓய்வு பெற ஆயத்தமாக உள்ளதா?” என்ற தலைப்பில் நடத்திய ICICI புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ் ஆய்வில், இது தெரியவந்துள்ளது.

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்ன் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி மணீஷ் துபே கூறியதாவது: இந்தியாவின் ஓய்வுபெறும் மக்கள் தொகை வளர்ந்து வருகிறது. 2031-ம் ஆண்டுக்குள் 41% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ஆயுட்கால எதிர்பார்ப்பு அதிகரிப்பதால், ஒரு பெரிய பிரிவின் மக்கள் நீண்ட ஓய்வுக்கு திட்டமிடுவதற்கான தீர்வுகளைத் தேடுவார்கள்.
ஒய்வு திட்டமிடல் நீண்ட கால செயல்முறையாகும். எனவே தனிநபர்கள் இந்த இலக்கை நோக்கி விரைவாக சேமிக்கத் தொடங்க வேண்டும்.

இது அவர்களுக்கு போதுமான வழக்கமான வாழ்நாள் வருமானத்தை ஈட்ட உதவும். ஓய்வு பெற்ற தனி நபர்கள் சந்தை ஏற்ற இறக்கம் இல்லாத வழக்கமான வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள்.

ஐசிஐசிஐ ப்ரூ கேரண்டீட் பென்ஷன் பிளான் ஃப்ளெக்ஸி

போன்ற நவீன வருடாந்திரத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழக்கமான பங்களிப்புகளைச் செய்யவும், ஒய்வு சேமிப்பை முறையாக உருவாக்கவும் உதவுகிறது. ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர வழங்குநர்களில் ஒருவராக, வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு திட்டங்களை உருவாக்க முயற்சி செய்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img