fbpx
Homeபிற செய்திகள்அதிநவீன 5ஜி ஸ்மார்ட் போன் ரூ.13,999-க்கு க்ரோமாவில் விற்பனை

அதிநவீன 5ஜி ஸ்மார்ட் போன் ரூ.13,999-க்கு க்ரோமாவில் விற்பனை

டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியாவின் முதலாவது மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான நம்பகமான சில்லறை விற்பனை நிறுவனமாகத் திகழும் க்ரோமா (Croma), அதிநவீன 5ஜி ஸ்மார்ட்போன்களுக்காகவே புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்குச் சமீபத்திய தொழில்நுட் பத்தை வழங்கும் வகையில், பல்வேறு வகையான 5ஜி ஸ்மார்ட் ஃபோன்களுக்கான விற்பனையை வெறும் ரூ.13,999 விலையில் இருந்து தொடங்குகிறது.

க்ரோமாவின் 5ஜி வார இறுதி விற்பனையானது அதன் அனைத்து விற்பனையகங்களிலும் க்ரோமா.காம் [croma.com] இணையதளத்திலும் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வரை வார இறுதிநாட்களில் நடைபெறும்.

புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதைச் சிறந்த அனுபவமாக மாற்றும் வகையில் வாடிக்கையாளர்களுக்குப் பிரத்யேகச் சலுகைகள், தள்ளுபடிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது க்ரோமா.

வாய்ப்புகள்

அந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட 5ஜி ஸ்மார்ட்ஃபோன்களுக்கு 50% வரை தள்ளுபடி வழங்குகிறது; தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களுக்கு* ரூ.20,000 வரையிலான குறிப்பிட்ட பலன் உறுதிப்படுத்தப்பட்ட தனித்துவமான வவுச்சர்களையும் [unique assured vouchers], மொபைல் போன்கள் பரிமாற்ற மதிப்பையும் [exchange],, மொபைல் போன்களை மேம்படுத்தப்படுத்துவதற்கான [upgrade] பலன்களையும் வெல்லும் வாய்ப்புகளை அளிக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்ஃபோனை ரூ.16,499 தொடக்க விலையில் வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 6.6 இன்ச் பிஎல்எஸ் எல்சிடி டிஸ்பிளே, 4ஜிபி ரேம், பிரமிக்கத்தக்க படங்களை எடுப்பதற்கான 50எம்பி+2எம்பி+2எம்பி ட்ரிபிள் ரியர் கேமிரா செட்டப் என்று ஆற்றல்மிகு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அற்புதமான ஸ்மார்ட்ஃபோன்.

படிக்க வேண்டும்

spot_img