தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர்கள், கோவை மாநகரப்பிரிவு நிர்வகிக்கும் கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் சாலை பாதுகாப்பு படை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டது.
சாலை பாதுகாப்புப்படை உருவான வரலாற்றினை வில்லுப்பாட்டாகப் பாடி மாணவிகள் அசத்தினர். செல்போன் பேசிக் கொண்டே சைக்கிளில் வருவோர் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதைக் குறு நாடகம் மூலம் வெளிப்படுத்தினர்.
சாலை பாதுகாப்பு விதி
கல்லூரி முன் வாகனத்தை பத்து அடி தள்ளி நிறுத்த வேண்டும் என்று பெற்றோரை அறிவுறுத்தி குறு நாடகம் வழி வெளிப்படுத்தினர். சாலை பாதுகாப்பு விதிகளை மையமாக வைத்து சாலை பாதுகாப்புப் படையினரின் சாகச நடனமும் நடைபெற்றது.
சாலை பாதுகாப்புப்படை அதிக £ரி டாக்டர் மகேஸ்வரி, செயலர் அருட்சகோதரி முனைவர் ரூபி அலங்கார மேரி, முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.



