டாக்டர் அகர்வால்ஸ் ரெட்டினா ஃபவுண்டேஷனால் விழித்திரை அறுவைசிகிச்சை மீது நடத்தப்படும் இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர கருத்தரங்கான ரெட்டிகான் – ன் 13-வது பதிப்பு சென்னையில் நடத்தப்பட்டது.
இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் 1000-க்கும் அதிகமான கண் மருத் துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். மத்தியச் சென்னை எம்.பி. தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார்.
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவர் பேராசிரியர் அமர் அகர்வால், செயலாக்க இயக்குநர் மற்றும் மருத்துவ சேவைகளின் தலைவர் டாக்டர் அஸ்வின் அகர்வால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் அமர் அகர்வால் பேசியதாவது: இந்தியாவில் விழித்திரை நோய்கள் பற்றி மக்கள் மத்தியில் குறைவான விழிப்புணர்வே இருக்கிறது.
விழித்திரை அறுவைசிகிச்சை தளத்தை இது மிகவும் முக்கிய மானதாக மாற்றுகிறது.
விழித்திரை நோய்கள் தொடர்பாக நிகழ்ந்திருக்கும் அதிவிரைவான மருத்துவ முன்னேற்றங்களினால், அவற்றின் மேலாண்மை மற்றும் சிகிச்சை அதிக பயனளிப்பதாகவும், திறன் மிக்கதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியிருக்கிறது.
‘ரெட்டிகான்’ கருத்தரங்கு
விழிப்படிக – விழித்திரை அறுவைசிகிச்சையில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் பற்றிய அறிவையும், தகவல்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் சிகிச்சையின் விளைவுகளை மேம்படுத்துவதற்கு விழித்திரை அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு உதவுவதே ‘ரெட்டிகான்’ கருத்தரங்கின் நோக்கமாகும்.
உரிய நேரத்திற்குள் நோயறிதல் செய்யப்படுமானால், விழித்திரை நோய்களுக்கு திறன்மிக்க சிகிச்சையின் மூலம் குணம் பெற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக கண்புரை போன்ற நோய்களுடன் ஒப் பிடுகையில், பார்வை திறனிழப்பு தடுப்பிற்கான செயல் திட்டங்களில் விழித்திரை நோய்களுக்கு குறைவான முன்னுரிமையே கிடைக்கிறது.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் விழித்திரை பரிசோதனை செய்துகொள்வது அத்தியாவசியம் என்றார்.



