fbpx
Homeபிற செய்திகள்டைட்டனின் ‘எட்ஜ் ஸ்கொயர்கிள்’ வாட்ச்சுகள் அறிமுகம்

டைட்டனின் ‘எட்ஜ் ஸ்கொயர்கிள்’ வாட்ச்சுகள் அறிமுகம்

இந்தியாவின் மிக நம்பகமான வாட்ச் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டைட்டன், எட்ஜ் செராமிக் கலெக்ஷன் பிரிவின் (Edge Ceramic Collection) கீழ் ‘எட்ஜ் ஸ்கொயர்கிள்’(Edge Squircle) வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

அதிக ஆடம்பரமில்லாத, அழகியலுடனான மினிமலிஸ்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ள எட்ஜ் ஸ்கொயர்கிள் வாட்சில் 4.45 மி.மீ. தடிமன் கேஸ் நேர்த்தியான, நவீன அழகியலான தோற்றத்தைத் தருகிறது.

சார்கோல் கருப்பு, ஆர்க்டக் வெள்ளை, அட்லாண்டிக் நீலம் என்று மூன்று வண்ணங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மிகப் பொருத்தமான இவ்வாட்ச்சுகள் ரூ.39,995-ல் இருந்து கிடைக்கின்றன.

நேரத்தை துல்லியமாக காட்டும் கால அளவியலின் அற்புதத்திற்கான உதாரணமாகவும், நுட்பமான நேர்த்தியான ஸ்டைலிங்கில் நிபுணத்துவம் கொண்டதாகவும் விளங்குகின்றன.

சதுரம் மற்றும் வட்ட வடிவங்களை உருவகப்படுத்துகிற கடிகாரத்தின் டயல் இரட்டை வண்ணத்தில் அமைந்திருப்பது, இந்த வாட்ச்சுகளுக்கு மிகவும் தனித்துவமான அட்டகாசமான தோற்றத்தை தருகிறது.

ஸ்கொயர்கிள் வாட்ச்

ஸ்கொயர்கிள் வாட்ச்சின் டயல் பகுதியில் உள்ள சஃபையர் கண்ணாடி மேற்பகுதியானது, ஒரு கிளாசிக் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனைச் சுற்றி இருக்கிற செராமிக் கேஸ், அதனையொட்டி மணிக்கட்டை சூழ்ந்திருக்கிற செராமிக் ஸ்ட்ராப் ஆகியன இந்த வாட்சை மேலும் அழகுபடுத்துகின்றன.

இந்த வாட்ச்சுகளின் கிரீடமும், பட்டாம்பூச்சி வடிவ கொக்கியும் கைகளுக்குப் பொருத்தமாக இருப்பதோடு, மணிக்கட்டை பாந்தமாக பிடித்திருக்கச் செய்கின்றன.
எட்ஜ் ஸ்கொயர்கிள் அல்லாமல் எட்ஜ் கலெக்ஷனின் கீழ் ஆண்களுக்கும் பெண்களுக்குமான பல்வேறு வாட்ச்சுகள் ரூ.19.995 முதல் ரூ.29,995 வரையிலான விலையில் பல கவர்சிசகரமான வண்ணங்களில் கிடைக்கின்றன.

2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டைட்டன் எட்ஜ் க்லஸ்டர், எட்ஜ் செராமிக், எட்ஜ் மெக்கானிகல் என்று பல கலெக்ஷன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வரி சையில் மிக மெலிதான எட்ஜ் வாட்ச்சுகளை வழங்கி வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img