இரைப்பை குடல்நோய் மருத்துவர் மற்றும் கோவை விஜிஎம் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத்துக்கு ‘சிறந்த மருத்துவர்’ விருது வழங்கப்பட்டது.
சிறந்த மருத்துவர்
அகில இந்திய இரைப்பை மற்றும் குடல் துறையின் (இந்தியன் சொசைட்டி ஆஃப் காஸ்ட்ரோ என்டிரோலொஜி) 2022-ம் ஆண்டுக்கான சிறந்த மருத்துவர் விருதை வழங்கி உள்ளது.
ஆண்டுதோறும் வழங்கப்படும் 7 விருதுகளில் இதுவும் ஒன்றகும். மாஸ்டர் ஆஃப் ஐ.எஸ்.ஜி. ((Master of ISG ) விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதுவரை இந்தியாவின் தலைசிறந்த 20 இரைப்பை மருத்துவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது வழங்கும் விழா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அண்மையில் நடந்தது.