fbpx
Homeபிற செய்திகள்‘தன்னம்பிக்கை வெற்றிக்கு அவசியம்’ பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்

‘தன்னம்பிக்கை வெற்றிக்கு அவசியம்’ பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்

கோவை கருமத்தம்பட்டியில் அமைந்துள்ள ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் 9-வது பட்டமளிப்பு விழா நடந்தது.

ஜான்சன்ஸ் அறக்கட்டளை மற்றும் ஜான்சன்ஸ் உயர் கல்விக் குழுமங்களின் தலைவர் டி.எஸ்.நடராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் டி.என்.கலைமணி, டி.என்.திருக்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் வரவேற்றார்.

காக்னிசன்ட் நிறுவனம்

சிறப்பு விருந்தினர், காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் சிவகுமார் தெய்வசிகாமணி பேசும்போது, மாணவர்களை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கற்பித்தல் ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும்.

பட்டதாரிகளுக்கு தன்னம்பிக்கை வெற்றிக்கு அத்தியாவசியம். தற்போது இடையூறாகத் தோன்றும் அனைத்து புள்ளிகளும் இறுதியில் இணைக்கப்பட்டு வெற்றிக்கு வழி வகுக்கும்.

இக்கல்லூரியில் சிறந்த உயர்தர கல்வி பயிற்றுவித்தல் முறையை பின்பற்றுவது, சமூகத்தில் இளம் பொறியாளர்களின் பங்களிப்பை வடிவமைக்க உதவுகிறது.

இக்கல்லூரியின் பட்டதாரிகள் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்து வருகின்றனர் என்றார்.

பட்டதாரிகளுக்கு பட்டச்சான்றிதழிகளை வழங்கினார். 1058 மாணவர்கள் பட்டம் பெற்றனர். அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img