சென்னையைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ் ஒர்க்ஸ் இன்க் (Freshworks Inc. (NASDAQ: FRSH), தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து, ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் நிகழ்வின் 11வது பதிப்பை நடத்த இருக்கிறது.
2023 ஜனவரி 8-ல் திட்டமிடப்பட்டிருக்கும் இம்மாரத்தான் நிகழ்வில் 20,000-க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்பாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும் டீஷர்ட், வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், என்பதே சென்னையில் நடைபெறுகிற மிகப்பெரிய ஓட்ட நிகழ்வாகும்.
இதில் ஆண்கள், பெண்களுக்காக மொத்தத்தில் நான்கு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.
முதன்மை ரேஸான முழு மாரத்தான் -(42.195 கி.மீ), 2019- ம் ஆண்டில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட பெர்ஃபெக்ட் 20 மைலர் – (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என்பவையே இம்மாரத் தான் தொகுப்பில் உள்ள டங்கிய நான்கு ஓட்ட நிகழ்வுகளாகும்.
முதன்முறையாக பார்வைத்திறன் பாதிப்புள்ள 30 நபர்களும், 50 பிளேடு ரன்னர்களும் மற்றும் 50 வீல்சேர் ரன்னர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.
மெரினா கடற்கரையின் நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, அழகான கடற்கரை பாதையில் கலங்கரை விளக்கத்தை சென்றடையும்.
அதன்பிறகு இது, பெருங்குடி, சோழிங்கநல்லூர், அக்கரை கடற்கரை சந்திப்பு, மாயாஜால், எம்ஜிஎம் அமைவிடங்களை கடந்து செல்லும். இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் நிகழ்வுகள் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை என்ற இரு கடற்கரை முனைகளிலிருந்து ஆரம்பமாகும்.
குழந்தைப் பருவ நீரிழிவு நிலை
குழந்தைப் பருவ நீரிழிவு நிலை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கிறது. நீரிழிவு மேலாண்மைக்காக இன்சுலின் தேவைப்படும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12000 முதல் ரூ.18000 வரை செலவாகிறது.
இத்தகைய குழந்தைகளின் கடும் நிதிச்செலவை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவது மாரத்தான் நிகழ்வு நடத்தப்படுவதன் நோக்கமாகும்.
உடல்நல பார்ட்னராக கோல்டு வின்னர், லைஃப் ஸ்டைல் பார்ட்னராக பாஷ்யம், சில்வர் பார்ட்னராக சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், மெட்ரோ பார்ட்னராக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மருத்துவ பார்ட்னராக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், முதல் பதில்வினை செயற்பாட்டாளர்களாக சிஆர் வாலன்ட்டியர்ஸ் ஆகி யவை இந்நிகழ்வில் இணைந்திருக்கும்.
ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2023 – பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் – ன் ரேஸ் இயக்குனர் வி.பி. செந்தில் குமார், தலைமை மனிதவளத்துறை அதிகாரி சுமன் கோபாலன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.



