fbpx
Homeபிற செய்திகள்தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகள்’ மைக்ரோலேண்ட் அறக்கட்டளை அறிமுகம்

தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகள்’ மைக்ரோலேண்ட் அறக்கட்டளை அறிமுகம்

மைக்ரோலேண்ட் லிமிடெட்டின் சமூக மேம்பாட்டுப் பிரிவான மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, குன்னூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆரோக்கியமான மற்றும் நிலையான சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தமிழ்நாடு கல்வித் துறை, கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவை இணைந்து, கடந்த12-ம் தேதி நடத்திய சந்திப்பில் 10 ‘தட்பவெப்ப நிலை பள்ளிகள்’ துவங்கப்பட்டன.

மைக்ரோலேண்ட் அறக்கட்டளையின் அறங்காவலர் கல்பனா கார் கூறுகையில், முன்முயற்சியின் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த தட்பவெப்ப நிலை பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்புப் பயிற்சி பெற்ற உள்ளூர் இயற்கைக் கல்வியாளர்கள், பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள வானிலை நிலையங்களின் மாதிரிகள் மூலம் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

மொபிடெக் நிறுவனத்தால் அமைக்கப் பட்ட இந்த தானியங்கு வானிலை நிலையங்கள், லேப் கிச்சன் கார்டன்கள், ஆற்றல் திறன் கொண்ட சாதனங்கள், நீர் பாதுகாப்பு சாதனங்கள் போன்ற அம்சங்களுடன் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழ்நாடு கல்வித்துறை துணை ஆய்வாளர் சுகுமார் பேசுகையில், தமிழ்நாடு கல்வித் துறை, மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, கீஸ்டோன் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு இடையேயான புதுமையான கூட்டாண்மையான தட்பவெப்ப நிலை ஸ்மார்ட் பள்ளிகளை துவங்குவதில் நீலகிரி மாவட்டம் முன்னிலை வகிக்கிறது.

தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக பூமியில் உண்டாகும் தாக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் என்பது எதிர்காலத்திற்கு தேவையான ஒரு செயலாகும் என்றார்.

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம்

பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாற்றம் அமைப்பின் இயக்குநர் டாக்டர் அனிதா வர்கீஸ் கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் அனுபவங்கள், சவால்கள் மற்றும் தீர்வுகளை நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள பரந்த சுற்றுச்சூழல் அமைப்புடன் பகிர்ந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

மொபிடெக் வயர்லெஸ் சொல்யூஷன் பிரைவேட். லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் கே.தேவேந்திரன் கூறுகையில், விவசாயிகளுக்கு நிலையான மற்றும் புதுமையான உள்கட்டமைப்புடன் கூடிய வயர்லெஸ் தீர்வுகளை வழங்குவதை மையமாகக் கொண்டு மொபிடெக் நிறுவனம் பணியாற்றி வருகிறது.

தற்போது இந்த திட்டத்திற்காக 10 பள்ளிகளில் மொபைல் செயலி மூலம் கண்காணிக்கப்படும் வானிலை நிலையங்களை நிறுவியுள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img