கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தினரால் நடத்தப்பட்ட ‘உலக சமாதான ஓவிய’ போட்டியில் கரூர் வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவிகள் முதல் மற்றும் மூன்றாமிடத்தைதட்டிச் சென்றனர்.
கரூர் லயன்ஸ் மார்னிங் ஸ்டார் பள்ளி
கரூர் லயன்ஸ் மார்னிங் ஸ்டார் பள்ளியில் நடந்த போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கு பெற்றனர்.
இதில் கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சுவாதி முதல் பரிசையும், புகழூர் டிஎன்பிஎல் பள்ளி மாணவி தர்ஷினி இரண்டாம் பரிசையும், கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரித்திகாஸ்ரீ மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
7 மாணவ, மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசுகளை கரூர் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத் தலைவர் ஜெயபால், குமார் முருகன், ராமநாதன், பங்க் அதிபர் கந்தசாமி ஆகியோர் வழங்கினர்.
நடுவராக ஓவிய ஆசிரியர் சேதுராஜ் குழுவினர் இருந்தனர்.
கருப்புசாமி, ரமேஷ், சரவணன், செல்வராஜ், சங்கர், செந்தில்குமார், சிவசங்கர், வில்லியம்ஸ் முருகானந்தம், கணேசன் மற்றும் லயன்ஸ் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.



