ஜவஹர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கோவை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. கோவை, ராஜ வீதியில் உள்ள அரசு மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் போட்டிகள் நடந்தது.
இப்போட்டியினை தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் புவனேசுவரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி அளவில் 6 தலைப்புக ளின் கீழும், கல்லூரி அளவில் 6 தலைப்புகளின் கீழும் நடைபெற்ற இப்பேச்சுப் போட்டியில் 53 மாணவர்களும் 22 கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.
பள்ளிப் போட்டிக்கு நடு வர்களாக ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள் ளியின் முதுகலைத் தமிழாசிரி யர் பிரகாஷ், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமி ழாசிரியர் முருகன் மற்றும் சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழா சிரியர் சித்ரா ஆகியோர் செயல்பட்டனர்.
கல்லூரிப் போட்டிக்கு நடுவர்களாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முத்துக் குமார், ஸ்ரீநேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் தனலட்சுமி மற்றும் சர்.சி.வி ராமன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் அனிதா ஆகியோர் செயல்பட்டனர்.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில்கோவை வெள்ளலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் பனிரெண்டாம் வகுப்பு உயிரி கணிதம் பயிலும் மாணவி காயத்ரி முதல் பரிசினையும், ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளியின் பதினொன்றாம் வகுப்பு கணினி அறிவியல் பயிலும் மாணவி லத்திகா இரண்டாம் பரிசினையும் ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளியின் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர் ஹரிநந்தன் மூன்றாம் பரிசினையும் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கான சிறப்புப் பரிசினை சின்னியம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஒன் பதாம் வகுப்பு பயிலும் மாணவி தேவி விஜயலட்சுமி மற்றும் காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியின் ஒன்ப தாம் வகுப்பு பயிலும் மாணவி ராம்பிரியா ஆகியோர் பெற்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் கோவை தமிழ்நாடு வேளாண் மைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தோட்டக்கலை இரண்டாமாண்டு பயிலும் மாணவி மித்ரா முதல் பரிசினையும், என்ஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை உணவு மற்றும் ஊட்டச்சத்தியல் இரண்டாமாண்டு பயிலும் மாணவி ஆர்த்தி இரண்டாம் பரிசினையும் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளமறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் வெங்கடேஷ் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.
போட்டியில வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் மாவட்ட ஆட்சியரால் பிறிதொரு நாளில் வழங்கப்படும்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் புவனேசுவரி செய்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார்.



