இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் முதல் CNG-யால் இயங்கும் நடுத்தர மற்றும் கனரக வணிக வாகனம் (M & HCV)டிரக்கை அறிமுகப்படுத்திய தன் மூலம் மீண்டும் புதிய டிரக்கிங் வரலாற்றை உருவாக்குகிறது.
புதிய தலைமுறை, மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்பு (ADAS) அறிமுகம் மற்றும் ஓட்டுநர் வசதியை மேம்படுத்த உலகத் தரம் வாய்ந்த அம்சங்களுடன் அதன் சிறந்த விற்பனையாகும் பிரைமா, சிக்னா மற்றும் அல்ட்ரா டிரக்குகளின் மேம்படுத்தப்பட்ட இடைநிலை மற்றும் இலகுரக வணிக வாகனம் (I & LCV) டிப்பர்கள் மற்றும் டிரக் குகளின் இந்தப் புதிய தொடரானது, குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உள் கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சியடைந்து வரும் பல-பயன்பாட்டுத் தேவைகளுக்கு சேவை செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன வெளியீட்டு விழாவில் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக் பேசியதாவது:
எங்கள் டிரக்குகள் இந்தியாவை இணைக்கின்றன. பொருளாதாரத்திற்கு ஆற்றல் அளிக்கின்றன.
தொழில்துறையின் தலைவராக, எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தீர்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் செயல்பாடு, உற்பத்தித்திறன், இணைப்பு, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் புதிய முன்னுதாரணங்களை உருவாக்குகிறோம்.
நாங்கள் அறிமுகப்படுத்தும் டிரக்குகள், மோதல் தணிப்பு அமைப்பு, லேன் மாற்ற எச்சரிக்கை, மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு, டிரைவர் எச்சரிக்கைகள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு ஆகியவற்றை வழங்கும் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மூலம் பாதுகாப்பான போக்குவரத்துக்கான வளர்ந்து வரும் தேவையை நிவர்த்தி செய்கின்றன.
மாற்று எரிபொருள் பவர் ட்ரெய்ன்களின் செறிவார்ந்த சலுகையுடன் தூய்மையான இயக்கத் தீர்வுகளையும் அவை வழங்குகின்றன. இந்த டிரக்குகளின் ஒவ்வொரு அம்சமும் பல்வேறு பணிச் சுழற்சிகள் மற்றும் சிறப்புப் பயன்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்றே அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், அவர்களின் ஓட்டுநர்கள், ஷிப்பிங் ஏற்றுமதியாளர்கள் மற்றும் நமது நாட்டிற்கு முன்னேற்றத்தை ‘டெலிவரி பிராசஸ்’ மூலம் போக்குவரத்தை மறுவரையறை செய்வதன் மூலம் லாஜிஸ்டிக்ஸ் சங்கிலியை மிகவும் திறமையானதாக்குகிறோம் என்றார்.



