கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், தேக்கல்பட்டி கிராமத்தில் நடைபெற்றுவரும் தரிசு நிலத் தொகுப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமையில் செய்தியாளர் பயணம் மேற் கொள்ளப்பட்டது.
அப்போது, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனைச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
ஐந்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக் கிட அனைத்துத் துறைகளின் ஒருங் கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை தொகுப் பாக மாற்றி சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர்வள ஆதா ரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்புசெட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர்ப்பாசன முறையினை பின்பற்றுதல், சமுதாய காடுகள் உருவாக்குதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன்கள் வழங்குதல், நீர்வள ஆதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் மூலம் ஏரி மற்றும் குளங்களை தூர் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிராமத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மேம்படுத்தப்படும்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 385 கிராம பஞ்சாயத்துக்களின் நிகர சாகுபடி பரப்பு 2,05,043 எக்டர் ஆகும். இதில் சாகுபடிக்கு உகந்த தரிசு நிலம் 6,067 எக்டராகவும், இதர தரிசு நிலங்கள் 23,501 எக்ட ராகவும் உள்ளன.
இவற்றில் 2021&-22-ம் ஆண்டில் 86 கிராம பஞ்சாயத்துகளில் சாகுபடிக்கு உள்ள தரிசு 1,780 எக்டர் மற்றும் இதர தரிசு 6,751 எக்டரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 32 கிராம பஞ்சாயத்துகளில், 38 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. நில நீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 10 எண்கள் திறந்தவெளி கிணறுகள், 28 எண்கள் ஆழ் துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 11 எண்கள் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு வசதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2022-23-ம் ஆண்டில் 86 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் சாகுபடிக்கு உள்ள தரிசு 707 எக்டராகவும், இதர தரிசு 2,640 எக்டராகவும் உள்ளது.
இதுவரை 12 கிராம பஞ்சாயத்துகளில், 12 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட் டுள்ளது. வாழப்பாடி வட் டாரத்தில் 2021-22ம் ஆண்டில் தேக்கல்பட்டி, காட்டுவேப்பிலைப்பட்டி, குறிச்சி மற்றும் புழுதிக்குட்டை கிராம பஞ்சாயத்துகளில்இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் தேக்கல்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளதை பார் வையிட்டு ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.
ரூ.2.72 இலட்சம் மதிப்பிலான தென்னங்கன்று, வரப்புப்பயிரில் உளுந்து, கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், மண்வெட்டி, கடப்பாரை, களைக்கொத்து, இரும்பு சட்டி, ஜிங்க் சல்பேட், ஜிப்சம் மற்றும் தார்பாலின் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ரூ.31.12 இலட்சம் மதிப்பிலான இதரத்திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.
2022-23-ம் ஆண்டில் சிங்கி புரம், மன்னார்பாளையம், சோமம்பட்டி மற்றும் விளா ரிபாளையம் கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கூறிய 8 கிராம பஞ்சாயத்துகளிலும் ஊரக வளர்ச் சித்துறையின் மூலமாக தடுப் பணை, கற்பாறை அணைகள், அமிழ்வு நீர் குட்டைகள், மரக்கன்றுகள் நடவு, வயலுக்குச் செல்லும் வண்டிப்பாதை / மண் சாலைகள் அமைத்தல், உலர்களம் அமைத்தல், பண் ணைக் குட்டைகள் அமைத்தல், சேமிப்புக் கிடங்கு அமைத்தல் மற்றும் தனிநபர் வயலோர வரப் புகள் அமைக்கும் பணிகளுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரி வித்தார்.
ஆலோசனைக் கூட்டம்
முன்னதாக, சேலம் மாவட் டம், வாழப்பாடி வட்டம், தேக்கல் பட்டி கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நடைபெற்றுவரும் தரிசு நிலத் தொகுப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலர்கள் மற்றும் விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்றது.
செய்தியாளர் பயணத்தின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர், இணை இயக்குநர் வேளாண்மை (பொ) என். பாலய்யா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) க.செல்வம், கால்நடை பரா மரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் மரு.தே. புருசோத்தமன், வாழப்பாடி அட்மா திட்டக் குழுத் தலைவர் எஸ்.சி.சக்ரவர்த்தி, தேக்கல்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் ஏ. சித்ரா அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.



