அயர்லாந்தில் உள்ள நியூபிரிட்ஜ் நகரில் சர்வதேச பில்லியர்ட்ஸ் நிறுவனம் பெண்களுக்கான பில்லி யர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியை கடந்த வாரம் நடத்தியது.
இதில் கோவையை சேர்ந்த சிநேந்ரா பாபு இந்தியாவில் இருந்து கலந்து கொண்டார்.
இதில் அயர்லாந்து, இங்கிலாந்து, இந்திய வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவை சேர்ந்த சிநேந்ரா பாபு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றில் முதன்மையாக வந்தார்.
பிறகு அரை இறுதி சுற்றில், அயர்லாந்து வீராங்கனையை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
சர்வதேச பெண்கள் பில்லியர்ட்ஸ் போட்டி இறுதிச்சுற்றில் 2-ஆவது இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று இந்தி யாவிற்கு பெருமை சேர்த் தார்.



