உலகின் மிகப்பெரிய ஆன்லைன் கற்றல் தளங்களில் ஒன்றான கோர்ஸிரா (Coursera) உடன் பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இம்மகளிர் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு 5500 உயர்தரப்பட்ட வேலை சம்மந்தமான ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
இந்த கோர்ஸிரா வானது 2500 டிஜிட்டலில் வழிகாட்டப்பட்ட திட்டங்களை பாடத்திட்டத்தின் வழியே இணைந்தும், கல்வியின் மேம்பட்ட திறன்களை வளர்த்தும், உயர்கல்வியில் பெரி யதொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியும் செயல்பட்டு வருகிறது.
இன்றைய வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் உலகில் தொழில்சார்ந்த திறன்களையும், படைப்பாற்றல் சிந்தனைகளையும், மேலாண்மையில் தலைமை ஏற்று நடத்துதலையும், கொண்ட இந்த கோர்ஸிரா மாணவர் களிடையே உந்து சக்தியாக செயல்பட்டு வருகிறது.
இந்த கோர் ஸிரா 250-க்கும் மேற்ப ட்ட முன்னணிப் பல்கலை க்கழகங்கள் யேல், மிக்சிகன் பல்கலைக்கழகம் கூகுள், ஐடிஎம் நிறுவனங்களின் சிறந்த பயிற்றுநர்களின் வழி பயிற்றுவிக்கப் படுகின்றன.
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி முத ல்வர் முனைவர் எஸ்.நிர்ம லாவின் கருத்துரைப்படி, கோர்ஸிரா கல்லூரி மாண விகள், ஆசிரியர்களுக்கு, தொழில்நுட்பத்துடன் கற்றல் மேம்பாட்டுத் திறனை வளர்த்தும், வேலைவாய்ப்பினை உருவாக்கியும், அங்கீகரிக் கப்பட்ட சான்றிதழ்களை வழங்கியும், நல் இணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோவை யில் உள்ள பூச £கோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 1963-ல் நிறுவப்பட்டது. 2004-ம் ஆண்டு முதல் இக்கல்லூரி தன்னாட்சி கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. 2016-ம் ஆண்டில் பல்கலை மானியக் குழுவால் சிறந்த கல்லூரி என்ற அந்தஸ்தையும், தேசியத் தர வரிசைப்பட்டியலில் (NIRF) 6-வது இடத்தினையும், தேசியத்தர மதிப்பீட்டில் A++ கிரேடையும் பெற்று சிறப்புடன் செயல்பட்டு வரும் இக்கல்லூரியுடன் ஆன்லைன் கற்றல் தளமான கோர்ஸிரா இணைந்து சமமான வேலைவாய்ப்பை நல்கும்.
இந்திய மற்றும் APAC Coursera நிர்வாக இயக்குநர் ராகவ் குப்தா, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியை ஆதரித்தும், பொருளாதார இயக்கத்தை மேம்படுத்தவும் இணைந்து பணி யாற்றிடவும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.
கோர்ஸிரா 2012-ம் ஆண்டில் இரண்டு ஸ்டான்போர்ட் கணினி அறிவியல் பேராசிரியர்கள £ன ஆண்ட்ரூ என்ஜி, டாப்னே கொல்லர் ஆகியோரால் தொட ங்கப்பட்டது. 100 மில்லியனுக்கும் அதிக மான பதிவு பெற்ற கற் பவர்களுடன் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் கற்றல் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.



