கோவை கணபதி பகுதியில் உள்ள சிஎம்எஸ் பள்ளியில் 1999ம் ஆண்டு பயின்ற அனைத்து மாணவர்களும், ஒன்றிணைந்து மீண்டும் சங்கமித்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது,
அனைத்து மாணவர்களும் ஒன்றினைந்து தங்களது நட்பை புதுப்பித்து கொள்ளவும், பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கணபதி பகுதியில் உள்ள சிஎம்எஸ் பள்ளி அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது,
பள்ளி நினைவலைகளை தாண்டி ஒவ்வொருவரும் தற்போது சமுதாயத்தில் மருத்துவராக, இன்ஜினியராக, அரசு அதிகாரிகளாக, சமூக ஆர்வலர்களாக, என பல்வேறு துறைகளில் வலம் வருகின்றனர்,
மேலும் பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில், என ஒவ்வொருவரும் வசித்துவரும் நிலையில் பழைய பள்ளி பருவத்தை நினைத்து பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அனைவரும், ஒன்று கூடி மகிழ்ந்தனர்,
இதில் கூடுதல் சிறப்பாக 1999ம் ஆண்டு இம்மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர், கலந்து கொள்ள முடியாதவர்களுக்காக இணையதளம் வாயிலாக சிறப்பு கூட்டு சந்திப்பும் நடைபெற்றது,
இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வெள்ளி காயின்களை பரிசாக மாணவர்கள், வழங்கினர். அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்,
மலரும் நினைவுகளில் மூழ்கி இருந்த மாணவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடையும் வகையில், சிறு சிறு விளையாட்டு நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.
நேற்று காலை முதல் மாலை வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் மாலையில் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து கண்ணீர் விட்டபடி பிரிந்து சென்றனர்,
இந்த நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களும் கலத்து கொண்டனர், மதிய வேளையில், முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பயிற்று வித்த ஆசிரியர்களுக்கு உணவுகளை பரிமாறி, தங்களது வாழ்க்கையை மீட்டு தந்த ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்,
இந்த விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஜின்சோ, ஜிஜேஸ், கிஷோர், பெஞ்சமின், கோகுல், பாக்யா, திவ்யா, பவித்ரா, சங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
இந்த இடத்தில் நிகழ்ச்சியை நடத்த வாய்ப்பு வழங்கிய, முன்னாள் மாணவரான திவ்யாவுக்கு அனைவருக்கும் ஒன்று சேர்ந்து சிறப்பு நன்றிகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது



