ஸ்ரீஅவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர்முனைவர் ச.ப.தியாகராஜன் கொடி ஏற்றிவைத்து, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
அவர் பேசும்போது, சுதந்திரம் அடைந்ததன் நோக்கத்தையும், புனித த்தையும் சரியாக பயன்படுத்துவது இந்திய ராகிய நம் ஒவ்வொருவரின் முதல் கடமையாகும். நாட்டின்வளர்ச்சிக்காக உண்மையாகவும், தியாக உள்ளத்தோடும் பாடுபட வேண்டும்.
மாணவர்களாகிய நீங்களே வல்லரசாக திகழ வேண்டும். கடமைகளை உணர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செ ல்ல வேண்டும் என்றார்.
மாணவர் மன்ற தலைவர் வி.அபர்ணா வரவேற்றார்.மாணவர் மன்ற துணைத் தலைவி எஸ்.இலக்கியா தேசிய மாணவர் படையினரின் சாதனைகள் குறித்து அறிக்கை வாசித்தார்.
ஸ்ரீஅவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் முனைவர் தி.ச.க.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கி பேசும்போது, நீதி, சுதந்திரம், ஒற்றுமை, சமத்துவம்,சகோதரத்துவம் போன்றவற்றை வளர்த்துக் கொண்டு சிறந்த எதிர் காலத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர் மன்ற துணைத் தலைவி எம்.ஜெமிலா நன்றி கூறினார். அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.



