கானா மற்றும் இந்தியா இடையே சுமூக வர்த்தகத்தை மேம்படுத்தும் விதமாக சென்னையில்ஈகோவாஸ் வர்த்தக ஆணையம் திறக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள வணிக சமூகத்தினர் கலந்து.கொள்ளும்வகையில் இந்தியா ஈகோவாஸ் வர்த்தக மாநாட்டை இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் சென்னையில் நடத்தியது.
இதில் கானா நாட்டில் பல்வேறு வர்த்தக நிறுவனங்களை துவக்கவும் வர்த்தகங் களைமேற்கொள்ளவும் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மிகவும் ஆர்வம் காட்டினர்.பார்மசூடிகல்ஸ், மருந்து கள், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ஜவுளி, ஆடைகள் மற்றும் தொழில்துறை மேம்பாடு ஆகியவற்றில் இருதரப்பு வர்த்தக வாய்ப்புகளுக்கும் நல்ல வரவேற்புஉள்ளது.கானா தூதுக்குழு தலைவர் ஜின்னா ரபிக் தலைமை தாங்கி பேசியதாவது:மாநிலத்தின் புதிய சீர்திருத்தக் கொள்கை குறித்தும் வெளிநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
கானாவில் மருந்து, ஆடைகள், ஜவுளி, வேளாண் செயலாக்கம் ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வருங்கால வணிகர்களை அழைத்துக் கொண்டு ஈகோவாஸ் தூதுக்குழு வரும்அக்டோபர் மாதம் கானா தலைநகர் அக்ராவுக்குச் செல்ல இருக்கிறது.உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில்பூங்காக்களுக்கு நிதியுதவி செய்வதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் எக்சிம் வங்கி மூலம்இந்தியா கடந்த காலங்களில் கானாவிற்கு கடன் உதவிகளை வழங்கி இருக்கிறது.
பல வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு தமிழ்நாடு ஒரு மையமாக இருப்பதால்,கானாவிற்கும் தமிழகம் ஒரு சிறந்த இடமாக இருக்கும். கானாவுக்கான முதலீடு களைவர வேற்கிறோம்.கானாவை தமிழகத்துடன் இணைக்க ஒரு உந்துசக்தியாக செயல்படுவோம். விரைவில் வர்த்தகஅலுவலகத்தை திறக்க இருக்கிறோம் என்றார்.ஜின்னா ரபீக்கிற்கு இந்தியா ஆப்பிரிக்கா வர்த்தக கவுன்சில் ஈகோவாஸ் வர்த்தகஆணையத்தின் வர்த்தக ஆணையராக நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
கானாவில் உள்கட்டமைப்பு மற்றும் மின் திட்டங்களை அமைப் பதற்காக அந்நாட்டு அரசிற்கு இந்தியா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிக மான கடன் அனும தியைஅளித்துள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியாவிடமிருந்து நீண்ட கால சலுகைக் கடன் பெறும்நாடுகளில் கானாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.



