fbpx
Homeபிற செய்திகள்கோவையில் சுதந்திரதின ஓட்டம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

கோவையில் சுதந்திரதின ஓட்டம்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்

கோவையில் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சுவாமி விவேகானந்தா கேந்திரா சார்பில் சுதந்திர ஓட் டம் நிகழ்வு நவ இந் தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் தனியார் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது. மத் திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை தாங்கினார்.

இதில் ஆயிரக்கணக் கான கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்வில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தேசியக்கொடிகள் வழங்கப்பட்டது. தேசியக் கொடியை அனைவரும் கையில் தூக்கிப்பிடித்தபடி மத்திய இணை அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் மத் திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியை அசைத்து சுதந்திர ஓட்டத் தைத் துவங்கி வைத்தார்.

இந்த சுதந்திர ஒட் டம் கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கல்லூரியில் இருந்து லட்சுமி மில் உட்பட முக்கிய சாலைகளின் வழியாக 7.2 கி.மீ தூரம் சென்று மீண்டும் இந்துஸ் தான் கல்லூரியில் நிறைவடைந்தது.

பின்னர் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: பாரதப் பிரதமர், 13-ம் தேதி (இன்று) முதல் 15ம் தேதி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடந்த 10 நாட்களாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது.

சுதந்திரத்திற்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கொள்ளும் விதமாகவும் நமது தேசியக் கொடியின் பெருமையை இளைய தலைமுறை யினரிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும் இந்த மாரத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பொது மக்கள் பிரதமர் அவர்களின் வேண்டு கோளை ஏற்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியைஏற்றி வருகின்றனர்.மலை கிராமங்களில் உள்ள மக்களும் தாமாக முன் வந்து இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

தமிழக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழ்நாடு பல சுதந்திர போராட்ட வீரர்களை தந்த மாநிலம்.

வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்« தவன், தீரன் சின்னமலை, பாரதியார் போன்றபல் வேறு விடுதலைப் போராட்ட வீரர்கள் உள் ளனர். குறிப்பாக கப்ப லோட்டிய தமிழன் வ உசிதம்பரனாரின் 150-வது ஆண்டு பிறந்த தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.

இவர்களை தவிர அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களும் பலர் உள்ளனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரி வித்தார். இந்நிகழ்வினை அடுத்து இன்று பிற்பகல் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்க உள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img